cinema news
ஒன்னாவது ஒப்பேருமா அனீ!…குழப்பத்தில் ஷங்கர்!…2கே கிட்ஸுக்கே பிடிக்கலையாமே?…
அனிரூத் தமிழ் சினமாவில் இசையை வேறு ஒரு விதாமாக பயணிக்க வைத்தவர் என்றே சொல்லலாம். கிராமத்திய இசை, நாட்டுப்புற பாடல்கள், கானா பாடல்கள் என கொடுத்து கேடப்பவர்களை துள்ளி குதித்து நடனமாட வைத்து வந்தார்கள் இதற்கு முன் இசையமைத்துவந்தவர்கள்.
ஆனால் அனிரூத்தோ இவற்றின் கலவையாக ஒரு பாதையை தேர்வு செய்து இன்றைய 2கே கிட்ஸை தன் வழிக்கு வரவைத்தவர் எனறே சொல்லலாம். குறிப்பாக அஜீத்திற்கு இவர் போட்டுக்கொருத்த மெட்டான ‘ஆலுமா, டோலுமா’வாக இருகட்டும், சமீபத்திய ரஜினியின் “ஜெயிலர்” படத்தின் டைகர் குக்கும் பாடலாகட்டும் அதிலிருக்கும் வைப் தமிழ் நாட்டையே குலுங்க வைத்தது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன்-2” படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் மிகபிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
அதிலிருந்து ‘தாத்தாவராரு’ பாடல் இப்போது எல்லா இடங்களிலும் ஒலிக்க துவங்கியுள்ளது. அதே நேரத்தில் அனிரூத் இசையமைத்துள்ள விதம் விமர்சனத்துக்குள்ளாகி விட்டது.
படக்கதை நிச்சயமாக “இந்தியன்” முதல் பாகத்தை போல அழுத்தம் அதிகம் கொண்டதாகத்தான் இருக்கும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதியை பார்த்து மிரண்டு போனார்கள் அப்போதைய ரசிகர்கள்.
அப்படி ஒரு கம்பீரமான கதாப்பாத்திரம் அது. “இந்தியன் – 2” கதையும் தாத்தாவை சுற்றியே தான் இருக்கும் என்பதால் கம்பீரம் மிக்க தாத்தா கமலுக்காக இவர் இசையமைத்துள்ள இந்த பாடல் எடுபடுமா? என்ற பேச்சு எழத்துவங்கியுள்ளது.
அதேபோல படத்தின் முழு பாடல்களும் வெளியிடப்பட்ட நிலையில் படத்தின் ஆடியோ இதுவரை எதிர்பார்த்த ஹிட் ஆக வில்லையாம். இதானால் இயக்குனர் ஷங்கர் குழப்பத்தில் இருப்பது தெரிவதாக பிரபல திரை விமர்சகர் பிஸ்மி சொல்லியிருக்கிறார்.
2கே கிட்ஸை குறிவைத்து தான் தாத்தா வராரு பாடல் இசையமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கூட இந்த பாடலை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிவதாக பிஸ்மி கவலை தெரிவித்திருக்கிறார்.