Taapsee pannu
Taapsee pannu

“இதாங்க ரகசியம்” போட்டுடைத்த நடிகை பன்னு

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்துக் கொண்டு வருகிறார் ஆடுகளம் நாயகி டாப்ஸி பன்னு.

டாப்ஸி: இவரின் இந்தி படமான பிங்க் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்திருந்தார். அதே படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்று ரீமேக் செய்தனர். ஹிந்தி, தமிழ் இந்த இரண்டு மொழிகளிலுமே படம் ஹிட் அடித்தது.

இந்நிலையில், பிங்க் படத்தில் நடிக்கும் பொழுது மீனாள் என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும் பொழுது தான் படக்குழுவிற்கு யோசனை வந்ததாகவும், மீனாள் கதாபாத்திரத்திற்கு டாட்டூ ஏற்றதாக இருக்கும் என்று பரிந்துரைத்ததால் தான் தன் கழுத்தில் டாட்டூ போட்டதாக டாப்ஸி ரகசியத்தை போட்டு உடைத்துள்ளார். படம் வெளிவந்த பிறகு ரசிகர்கள் பலர் அவரைப்போல டாட்டூ வேண்டுமென்று விரும்பியதாக அறிந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருப்பதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/B-bKLi8ph2W/?utm_source=ig_embed&utm_campaign=loading

படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகள் கழித்து டாட்டூவின் ரகசியத்தை டாப்ஸி அறிவித்துள்ளது, ரசிகர்களுக்கு நீண்டநாள் சந்தேகத்தை தீர்த்து வைத்துள்ளார்.