cinema news
கல்யாண விஷயத்தில் பிரேம்ஜி கொடுத்த டுவிஸ்டு…சர்வே எடுக்க ஆரம்பித்த நெட்டிசன்கள்?…
நேற்று வரை முரட்டு சிங்கிளாக இருந்தவர் பிரேம்ஜி அமரன். திடீரென அவருக்கு திருமணம் நடக்கப்போகிறது என வலைதளம் சொல்லியது. திருமணம் முடிக்கவிருக்கும் இருவரின் பெயர் அச்சிடப்பட்ட அழைப்பிதல் வைரல் ஆகிவருகிறது.
அதே நேரத்தில் “ஐயா” படத்தில் கருப்பசாமியாக நடித்த பிரகாஷ் ராஜ் இறந்தது போல நடித்து, தனது இரங்கலுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என பார்க்கும் காட்சியைப்போல இந்த அழைப்பிதல் விஷயம் அமைந்துவிடக்கூடாது என நெட்டிசன்கள் பேசத்துவங்கியுள்ளனர்.
பட ப்ரமோக்காக இப்படி செய்துவிட்டார் என சொல்லி முடித்துவிடவும் கூடாது, காரணம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அது கருத்தப்படவில்லை என்பதால்.
எப்படியோ பிரேம்ஜிக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதுவே அவரது ரசிகர்களின் நீண்ட நாள் பிரார்த்தனையாக இருந்து வருகிறது. 44வயதை கடந்துள்ள இவரது திருமண அறிவிப்பு செய்தி வந்த பிறகு இதே போல வயது கடந்து திருமணம் முடித்த கோலிவுட் பிரபலங்களை பற்றிய சர்வே வெளிவந்துள்ளது.
காதல் மன்னன் ஜெமினி கணேசன் இரண்டு திருமணம் முடித்திருந்தவர் தனது 77வது வயதில் 36வயதான ஜூலின் ஆன்றோவுடன் வாழ்ந்தார். இயக்குனர் பாலுமகேந்திரா 59வயதில் மோனிகாவை திருமணம் முடித்திருந்தார். இது இவரின் மூன்றாவது திருமணம். இயக்குனர் வேலு பிரபாகரன் தன்னுடைய 60வது வயதில் 30வயதான ஷெர்லி தாஸை மணமுடித்தார்.
இவர்களை போலவே “தில்” பட வில்லனான ஆஷிஷ் வித்யார்த்தி ரூபாலிபருவாவை திருமணம் முடித்தார். இவரின் இரண்டாவது திருமணம் நடந்த போது இவருக்கு வயது 58. பிரேம் திருமணம் என சொன்னதுமே இந்த சர்வே வந்துள்ள நிலையில் அடுத்து இன்னும் முரட்டு சிங்கிள்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற லிஸ்டை வெளிவிட்டு விடுவார்கள் போலயே என கிண்டலாக சொல்லத்துவங்கியுள்ளனர்.