cinema news
சூர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுரேஷ் ரெய்னா – ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
டிவிட்டரில் ரசிகர்களிடம் கேள்விக்கு நடிகர் சூர்யா பதிலளித்த்துக் கொண்டிருந்த போது இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா எழுப்பிய கேள்வி சூர்யாவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகர் சூர்யா நடித்து என்.ஜி.கே மற்றும் காப்பான் திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இந்நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் இன்று மாலை ரசிகர்களின் கேள்விக்கு சூர்யா நேரிடையாக பதிலளிப்பதாக அறிவிக்கப்பட்டது.
அவரிடம் பலரும் பல கேள்விகளை எழுப்ப வரும் பொறுமையாக பதில் கூறிவந்தார். அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு வீரர் யார்? ஏன்? என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேள்வி எழுப்பினார்.
அவரிடமிருந்து கேள்வி வந்ததில் திக்குமுக்காடிப்போன சூர்யா, உங்களையும், தோனியையும் மிகவும் பிடிக்கும். நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள். தோனி நன்றாக வரைகிறார். நான் எப்போதும் சிஎஸ்கே ரசிகன் என பதிலளித்தார். இந்த பதிலை மட்டும் 40 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் பதிலுக்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார்.