ramarajan vijayakanth
ramarajan vijayakanth

நட்பு வேற தொழில் வேற…விஜயகாந்துக்கு நோ சொன்ன ராமராஜன்!…

கட்சித்தலைவராகும் வரை திரைப்படங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட பின்னர் படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தும் கொண்டார். திரைத்துறையில் உச்சம் பெற்றதைப்போலவே அரசியலும் உயரத்தை அடைந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த்.

நகரத்தையும், மாறிவந்த நாகரீகத்திற்கு ஏற்றது போல கதைகளை தேடித்தேடி நடித்து வந்த கதா நாயகர்கள் மத்திடில் கிராமத்து சப்ஜெக்ட்களுக்கே முன்னுரிமை கொடுத்து நடித்தவர் ராமராஜன்.

எளிமையான நாயகன் என பெயர் பெற்றவரும் கூட இவர். சில படங்களில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவை இழுத்து விடாமல் அரை டிரவுஸரையே உடையாக படம் முழுவதும் அணிந்து நடித்தவர்.

ரஜினி, கமல், விஜயகாந்த் கூட இவரது வெற்றியை கண்டு அஞ்சி ராமராஜன் ராமராஜன் படங்கள் வெளியாகும் போது தங்களது படத்தினை வெளியிட யோசித்தது இருந்துள்ளது தமிழ் சினிமாவில்.

nadhiya vijayakanth
nadhiya vijayakanth

தொட்டதெல்லாம் வெற்றி தான் மகிழ்ச்சியின் உச்சத்தில் ராமராஜன் இருந்து வந்த போது விஜயகாந்த்.  நதியா நடிப்பில் வெளிவந்த “பூ மழை பொழியுது” படத்தில் நடிக்க முதலில் ராமராஜனுக்குத்தான் அழைப்பு விடப்பட்டதாம்.

கதையை கேட்ட ராமராஜன் செகன்ட் ஹீரோவாக தன்னால் நடிக்க முடியாது என சொல்லி படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். விஜயகாந்த் படமாகவே இருந்தாலும் தனது கொள்கைக்கு எதிராக இருக்க முடியாது என தீர்க்கமாக சொல்லிவிட்டாராம். இவருக்கு பதில் சுரேஷ் அந்த படத்தில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

நட்பு, வேறு தொழில் வேறு என்பதில் மிகத்தெளிவாக இருந்தவர் ராமராஜன். 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்துள்ள “சாமானியன்” படம் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.