ஸ்வீட் எடு கொண்டாடு!…வந்துச்சுப்பா அப்டேட்டு…தலைவர்னா சும்மாவா?…
rajini lokesh

ஸ்வீட் எடு கொண்டாடு!…வந்துச்சுப்பா அப்டேட்டு…தலைவர்னா சும்மாவா?…

“ஜெயிலர்”படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் அவரின் அடுத்தடுத்த படங்களை தீவிரமாக கவனிக்கத்துவங்கியுள்ளனர். “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. அந்த படத்தில் பிரபலங்கள்  பலரும் இணைந்திருப்பதாக செய்திகள் வலம் வரத்துவங்கியது.

இதனிடையே ரஜினியின் 171வது படம் குறித்த பரபரப்பு தகவல்களும் வெளிவந்த வண்ணமே உள்ளது.ரஜினி 171னை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய், கமல்ஹாசன் இவர்கள் இருவரையும் வைத்து எடுத்த படங்கள் வாகை சூடியது. “மாஸ்டர்” மாதிரி இல்லாமல் “லியோ’ மட்டும்  சற்று எதிர்மறை விமர்சனத்தை வாங்கிக்கொடுத்தது.

rajini new title
rajini new title

ரஜினி, லோகேஷ் இணையும் படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படிப்பட்ட நேரத்தில் தான் ரஜினி ரசிகர்களை துள்ளி குதிக்க வைக்கும் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.  படத்தை “சன் பிக்சர்ஸ்” தயாரிக்க உள்ளது.

“வேட்டையன்”படத்தின் அப்டேட்களாலேயும் ஆனந்தப்பட்டு வரும் ரஜினி ரசிகர்களுக்கு, மகிழ்வான அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிடுள்ளது சன் பிக்சர்ஸ். “எந்திரன்” படத்தில் துவங்கிய ரஜினி “சன் பிக்சர்ஸ்” கூட்டணி அதனைத்தொடர்ந்து “பேட்ட” படத்திலும் இணைந்தது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த “அண்ணாத்த” படத்தையும் இவர்களே தயாரித்தனர். எதிர்பார்த்த அளவில் பேசப்படாத இந்த படத்திற்கு பிறகு “ஜெயிலர்” படத்தில் வெற்றி கண்டனர். ரஜினியின் 171வது படத்தையும் “சன் பிக்சர்ஸே” தயாரிக்க உள்ளது. இப்படி உள்ள நிலையில் தான் படத்தை பற்றிய முக்கியமான ஒரு அப்டேட் வெளிவந்துள்ளது.

வருகிற 22ம் தேதியன்று ரஜினி 171 படத்தின் பெயரை  வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமான செய்தியை சொல்லியுள்ளது “சன் பிக்சர்ஸ்”. அப்டேட் வந்த மறு நிமிடமே கொண்டாட்டம் குறித்த சிந்தனையில் இறங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.