சுதா கொங்கரா கதையில் நடித்தது நல்ல அனுபவம்- சாந்தனு

சுதா கொங்கரா கதையில் நடித்தது நல்ல அனுபவம்- சாந்தனு

அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாந்தனு. பாக்யராஜின் மகனான போதும் இதுவரை சொல்லிக்கொள்ளும்படி பெரியதொரு திருப்பமான படங்கள் இவருக்கு வந்ததில்லை. தற்போது மதயானைக்கூட்டம் படத்தை இயக்கிய இயக்குனரின் அதிரடியான புதிய படத்தில் நடித்து வருகிறார். அதை எதிர்பார்த்து வருகிறார் இவர். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் அதனால் அந்த படத்தையும் எதிர்பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் வெப் சீரிஸ் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார் அந்த வெப் சீரிஸ் நெட்ப்ளிக்ஸில் டிசம்பர் 18 முதல் ஒளிபரப்பாகிறது.

சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிப்பது மாயாஜாலம் போல் உள்ளது என சாந்தனு கூறியுள்ளார்.