Latest News
அழகில் மயங்கி அமைதி காக்கும் ஜெயம் ரவி?…சும்மா இருந்த சுசித்ரா பத்த வச்சு விட்டுருக்கிற புது வெடி…
‘ஜெயம்’ ரவி – ஆர்த்தி இவர்களை பற்றிய பேச்சுக்கள் தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில். தனது இன்ஸ்டா பக்கத்திலிருந்து ‘ஜெயம்’ரவி சம்பந்தப்பட்ட போட்டோக்கள் எல்லாவற்றையும் அதிரடியாக நீக்கினார் ஆர்த்தி. வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது போல ரவி -ஆர்த்தி மீது கவனம் திடீரென திரும்ப காரணமாக மாறியது.
தனது வளர்ப்பு மகன் சங்கரின் சொல்படி நடக்க ‘ஜெயம்’ரவியின் மாமியார் சுஜாதா தொடந்து வற்புறுத்துவதாகவும். இதனால் கோபத்தின் உச்சிக்கே ரவி சென்று விட்டார். மற்றபடி ஆர்த்தியுடன் எந்த விதமான மனக்கசப்பும் ரவிக்கு கிடையாது. இது தான் இந்த ஜோடி விவகாரத்தில் இருந்து வரும் பேச்சுக்கள்.
மாமியார் சுஜாதாவின் படத்தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க ‘ஜெயம்’ரவி இருபத்தி ஐந்து கோடி ரூபாய் கேட்டதாகவும். அதை கொடுக்க சுஜாதா மறுத்து விட்டதாகவும், தன்னுடைய அம்மாவின் பேச்சை கேட்காமல் இருந்து விட்டார் தனது கனவன் என்ற கோபத்தில் தான் படங்களை எல்லாம் நீக்கினார் இதுவும் தான் இவர்கள் விஷயத்தில் சொல்லப்பட்டு வரும் கதைகள்.
கொஞ்ச நாட்களாகவே பரபரப்பை கிளப்பி விடாமல் அமைதி காத்து வந்தார் பாடகி சுசீத்ரா. திடீரென ‘ஜெயம்’ரவி – ஆர்த்தி திடீரென உள்ளே பிகுந்து கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டார். இந்த விஷயம் குறித்து சுசீத்ரா பேசும் வீடியோ தான் இப்போது வைரல். ஆர்த்தி கொஞ்சம் ஆடம்பரமான பொண்ணு. வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ‘ஜெயம்’ரவி வீட்டிற்கு போகும் போது ஆர்த்தி என்ன மனநிலையில் இருப்பார் என்பது தெரியாது.
தனது மனைவியின் அழகு முகத்தை பார்த்தே இத்தனை ஆண்டுகள் அவருடன் சேர்ந்து வாழ்ந்து விட்டார் ரவி. அழகு எத்தனை நாட்கள் தான் இருக்கும், அதோடு ‘ஜெயம்’ரவி இத்தனை நாட்கள் ஆர்த்தியோடு வாழ்ந்ததே பெரிய விஷயம் என சொல்லி புதுசா ஒரு வெடியை பத்த வைத்து விட்டுள்ளார் சுசீத்ரா.