cinema news
அவரா ஹீரோ ஆள விடுங்க சாமி…எனக்கு செட் ஆகாது!…அடிதடி ஆளையே அலற விட்ட ஆக்சன் கிங்?…
தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அர்ஜூன். அவரின் அறிமுக தெலுங்கு துவக்கத்தில் சரியாக போகமல் இருந்ததாம். படம் படுதோல்வி என நினைத்த நேரத்தில் திடீரென டாப் கியர் போட்டு வேகம் எடுத்து ஒராண்டு ஓடியது அந்த படம்.
ஸ்டண்ட் இயக்குனர் ஷாகுல் தான் அர்ஜூனை சினிமாவில்அறிமுகப்படுதியவராம். அர்ஜூனுக்கு அங்கீகாராம் கிடைத்து, தனக்கென ஒரு நல்ல இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்த பிறகு ஷாகுலுக்கு பதிலாக வேறு ஒரு ஸ்டண்ட் கலைஞரை கமிட் செய்ய சொன்னாராம். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாம்.
அதன் பின்னர் அர்ஜூன் படத்தில் பணி செய்ய ஷாகுலுக்கு அழைப்பு வந்ததாம். முதலில் அதை தவிர்த்த ஷாகுல், பின்னர் ஒத்துக்கொண்டாராம். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது அர்ஜூன் ஷாகுலிடம் நான் தான் இந்த வாய்ப்பை உங்களுக்கு வாங்கி தந்தேன் என சொல்லவும், ஷாகுல் இயக்குனரை அழைத்து கேட்டிருக்கிறார்.
இயக்குனரோ அர்ஜூன் சொல்வதில் உண்மை இல்லை என சொல்லிவிட்டாராம். இதனால் இருவருக்கு மோதல் முற்றியதாம். அர்ஜுனிடம் ஸ்டண்ட் இயக்குனர் ஷாகுல் இனி உன் படத்தில் நான் இனி வேலை செய்ய மாட்டேன் என சொல்லிவிட்டாராம். இருவரும் “கர்ணா”, படத்தில் தான் கடைசியாக ஒன்றாக வேலை பார்த்திருந்தனர்.
அர்ஜூன் படங்கள் என்றாலே அதில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கம், அதோடு சண்டை காட்சிகளிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும். அர்ஜூன் விஜயுடன் “லியோ” படத்தில் நடித்திருந்தார். அஜீத்துடன் “விடாமுயற்சி” படத்திலும் நடித்து வருகிறார்.