cinema news
அப்படி இப்படி எப்படி வேணாலும் போட்டுக்குங்க!…ஆள விடுங்கப்பா சாமி பதறி ஓடிய பா.விஜய்…
“கில்லி” படம் ரீலீஸ் செய்யப்பட்டதிலிருந்து படத்தைப் பற்றி “‘நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக” தகவல்கள் வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டே இருக்கிறது. படம் வெளியான பொழுது கிடைக்க தகவல்களை விட பழங்கால சிற்பங்களை ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக கிடைக்கும் பதில்கள் போல தான் “கில்லி” படம் பற்றி ஏராளமான தகவல்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
பட கிளைமாக்ஸ்க்கு முன்னால் வரும் ‘அப்படி போடு’ பாடலில் விஜயும், திரிஷாவும் உற்சாகம் பொங்க நடனமாடி இருப்பார்கள். அந்த பாடலை கேட்டு திரையில் பார்த்த ரசிகர்கள் தங்களை மறந்து ஆடித்தள்ளி இருந்தார்கள். அதேபோல வீடுகளில் தொலைக்காட்சிகளில் பார்த்தாலும் மெய் மறந்து இந்த பாடலுக்கு கைதட்டியதோடு மட்டுமில்லாமல் தங்களை மறந்து நடமாடியும் வந்திருக்கிறார்கள்.
அந்த பாடல் உருவானதை பற்றி அதன் பாடலாசிரியர் பா.விஜய் சொல்லி இருந்தார். முதலில் அவர் எழுதிக் கொடுத்த பல்லவிகள் எல்லாம் இசையமைப்பாளர் வித்தியாசகரை திருப்தி படுத்தவில்லையாம். ஒரு கட்டத்தில் சோர்வடைந்த பா.விஜய் வித்யாசாகரை பார்த்து நீங்க என்னதான் எதிர்பார்க்கிறிங்க?, எப்படித்தான் வேணும்? என கேட்டாராம்.
‘இந்த நட போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமான்னு’ பா விஜய் எதேர்ச்சையாக சொன்னராம். அதை கச்சிதமாக பிடித்துக் கொண்ட வித்தியாசாகர் இது இருக்கட்டும் இதுக்கு பல்லவி எழுதி கொடுங்க, இந்த வரியை இடையில் வைத்து விடலாம்.
அப்படி உருவானது தான் ‘அப்படி போடு’ பாடல். எல்லா பாடல்களிலும் முதலில் பல்லவி தான் எழுதப்படுமாம். ஆனால் இந்த பாடலில் மட்டும் பா. விஜய் பல்லவிக்கு பின்வரும் வரிகளை எழுதி கொடுத்த பிறகு தான் பல்லவி எழுதப்பட்டதாம்.