ஸ்ரீ ரெட்டி தெலுங்கு திரைஉலகிலும் மற்றும் தொலைக்காட்சி துறையிலும் அறிமுகமானவர்.
தெலுங்கு சினிமா துறையில், பலர் தன்னை திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி உபயோகப்படுத்தி கொண்டதாக பல்வேறு முன்னணி இயக்குனர்களையும், நடிகர்களையும், தயாரிப்பாளர்களையும், வம்புக்கு கோர்த்துவிட்டவர். தெலுங்கில் மட்டும்மல்ல தமிழிலும், பல்வேறு பிரபலங்களின் மீதும் எக்கச்சக்கமான சர்ச்சைகளை அடுக்கிக் கொண்டே போனார்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் நாளுக்கு நாள் தன்னுடைய சர்ச்சை மிகுந்த பேச்சுக்களாலும், போட்டோக்களாலும், தன் முகத்தை தன் பெயரை மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே தான் போகிறார்.
அந்த வகையில், ஸ்ரீ ரெட்டி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ரசிகர்களை கேவலமான வார்த்தையில் திட்டி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுமாறு கூறியுள்ளார். அதனைப் பார்த்த பலர், இவளுக்கு எப்பவுமே அசிங்கமா பேசுறத பொழப்பாபோச்சு என்று திட்டியுள்ளார்.
