Connect with us

இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்

cinema news

இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கடந்த 25ம்தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார். இவரது மருத்துவத்திற்கு அதிகப்படியான பணத்தை கேட்டதாகவும் கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்தபோது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடமும் தமிழக அரசிடமும் உதவி கேட்டதாகவும் இணையத்தில் வைரலான செய்திகள் பரவியது.

இதை முற்றிலும் மறுத்துள்ளார் எஸ்.பி.பி சரண். எம்.ஜி.எம் மருத்துவமனை என் தந்தையை எப்படி பார்த்துக்கொண்டார்கள் என எங்கள் குடும்பத்துக்கு நன்கு தெரியும்.

அங்கு சென்று வந்தது ஒரு வீட்டிற்குள் சென்று வருவது போலத்தான் இருந்தது. மருத்துவர்கள் செவிலியர்கள் என எல்லாருமே நன்றாக பார்த்துக்கொண்டனர். அவர்களை இப்போதும் நான் சந்தித்து பேசி இருக்கிறேன்.

விரைவில் இந்த வதந்தி தொடர்பாக அனைவரும் சேர்ந்தே கூட்டாக ஒரு அறிக்கை விடலாம் என்று நினைக்கிறேன்.

இது போன்ற வதந்திகளை பரப்பி எங்கள் குடும்பத்தை காயப்படுத்தாதீர்கள் என எஸ்.பி.பி சரண் கோரிக்கை வைத்துள்ளார்.

More in cinema news

To Top