cinema news
மீண்டும் ஒன்றிணைந்த இளையராஜா – எஸ்.பி.பி – களைகட்டும் கச்சேரி
மனக்கசப்பில் பிரிந்துவிட்ட இசைஞானி இளையராஜவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு தனது பாடல்களை யாரும் பயன்படுத்தக்கூடாது, மேடைக்கச்சேரிகளில் பாடக்கூடாது, பாடினால் எனக்கு காப்புரிமை கொடுக்க வேண்டும் என இளையராஜா அதிரடியாக அறிவித்தார். ஒரு பாடல் கச்சேரிக்காக வெளிநாடு சென்றிருந்த எஸ்.பி.பிக்கும் இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த எஸ்.பி.பி இனிமேல் இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என அறிவித்தார். மேலும், இளையராஜா மீது கோபமில்லை.. மன வருத்தம்தான் என பேட்டி கொடுத்தார்.
இந்நிலையில், வருகிற ஜூன் 2ம் தேதி சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் இளையராஜாவின் பிரம்மாண்ட இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், எஸ்.பி.பி., யேசுதாஸ் , சித்ரா உட்பட பலரும் கலந்து கொண்டு பாடவுள்ளனர். இதற்கான ஒத்திகையில் கலந்து கொள்ள இன்று எஸ்.பி.பி வந்த போது ராஜாவும், அவரும் கட்டி அணைத்து தங்களின் நட்பை புதுப்பித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளை நெட்டிசன்கள் பலரும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.