“வெண்ணிலா கபடி குழு” படத்தின் மூலமாக மிகப்பெரிய திருப்புமுனையை தமிழ் சினிமாவில் பெற்றவர் சூரி. அதன் பின்னர் நடித்த படங்களின் நகைச்சுவை பெரிய அளவில் எடுபட பிரபலமான காமடியானாக மாறினார். இப்போது கதாநாயகனாகவும் ஆகிவிட்டார்.
கதாநாயகனாகவும் நிச்சயம் ஒரு மிகப்பெரிய ரவுண்டு வருவார் என காத்திருக்கின்றார்கள் இவரது ரசிகர்கள். சினிமாவில் நடிக்கத்துவங்கும் முன் இவர் லைட் ஆப்பரேட்டர், செட் அஸிஸ்ட் என ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த வேலைகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார் சூரி.
பிரபு, பிரியா ராமன், சுவலட்சுமி நடித்து வெளியான “பொன்மனம்” படத்தின் பாடல் காட்சி ஒன்று ஊட்டியில் படமாக்கப்பட்டதாம். பாடலை படமாக்கும் போது மழை வேற பெய்து வந்ததாம். பின்னணியை புகை மண்டலமாக காட்ட நெருப்பு கங்கில் சாம்பிரானி கலந்து ஷெட் முழுவதும் போடப்பட்டதாம். இந்த வேலையை செய்தது சூரிதானாம்.

கையில் நெருப்பு கங்கு வைத்திருந்த தட்டோடு சூரி வேகமாக ஓடினாராம் காட்சி விரைவாக படமாக்கப்பட. அப்போது வழுக்கி விழுந்து விட்டாராம். அவர் கையில் வைத்திருந்த தட்டு அவர் மீதே விழுந்து சூரிக்கு தீக்காயம் ஏற்பட்டதாம். மழை, மற்றும் அதிக குளிரினால் சூரி நிலை தடுமாறினாராம்.
இதனை பார்த்த படத்தின் கதாநாயகன் பிரபு பணியாளர்கள் குளிரில் பாதிக்கப்பட கூடாது என அங்கிருந்த 300 பேருக்கும் ஸ்வெட்டர் தனது செலவில் வாங்கிக்கொடுத்தாராம். அதன் பின்னரே படக்குழுவிலிருந்த பணியாளர்கள் எல்லாம் நிம்மதியாக உறை பனியை தாண்டியும் தங்களது வேலையை சந்தோஷமாக செய்தார்களாம். அவர்களின் கஷ்டத்தை பார்த்து தானாக முன் வந்து அரவணைத்தது பிரபுவின் கைகள் தான் என சூரி சொல்லியிருந்தார்.