cinema news
சும்மா கிழி கிழின்னு கிழிச்ச சிம்பு!…என்ன பிரயோஜனம் ஸ்கோர் பண்ணது இவர் இல்லையே…
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிலம்பரசன். அப்பொழுதே இசை, நடனத்தின் மீது தனக்கு இருந்த ஆர்வத்தையும், தனக்குள்ளே இருந்த திறமைகளையும் திரையில் வெளிகாட்டியவர். இவருடைய வெற்றிக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டவர் இவரது தந்தை டி.ராஜேந்தர்.
அவர் பேசுவது போல அடுக்கு மொழி வசனங்களை தனது இளம் வயதிலேயே பேசி அப்பொழுதே தனக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் இருக்கிறது என அஸ்திவாரத்தை போட்டு விட்டார். சமீப காலமாக இவருக்கு படங்கள் பெரிதளவில் எடுபடவில்லை என்றாலும் தற்பொழுது மணிரத்னத்தின் “தக்- லைஃப்” படத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட சிம்பு நிறைய பாடல்களை பாடி உள்ளார். அவர் நடித்த படங்களில் அவருக்கே அவரது குரல் பயன்பட்டதோடு மட்டுமல்லாமல், வேறு சில கதாநாயகர்களுக்கும் இவரது குரலில் பாடல்களை பாடிய பாடல்கள் மிகப் பிரமாண்டமான வெற்றிகளை பெற்ற தந்தது.
“கேடி பில்லா கில்லாடி ரெங்கா” படத்தில் ‘ஒரு புறம் போக்கு’ பாடலை பாடியது இவரே தான். “தி வாரியர்” தெலுங்கு படத்தில் மெஹா ஹிட்டான ‘கமான் பேபி…புல்லட்டு’ பாடல். “பருத்திவீரன்” கார்த்தியின் “சுல்தான்” படத்தில் ‘யாரையும் இவ்வளவு அழகா பார்க்கல’ பாடலையும் அம்சமாக பாடியிருந்தார் சிம்பு, “வாரிசு” படத்தில் விஜய்க்காக ‘தீ தளபதி’ பாடலை வெறித்தானமாக பாடியிருந்தார்.
தன்னுடைய படங்களில் தனக்காக இவரே பாடிய “வல்லவன்” பட ‘லூசுப்பெண்னே, லூசுப்பெண்னே’ , “மன்மதன்” படத்தின் ‘என் ஆசை மைதிலியே, என்னை நீ கதலியே’ போன்ற பாடல்கள் வேற லெவல் ஹிட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.