janaki ilaiyaraja
janaki ilaiyaraja

பாடும் பொழுது அழுத ஜானகி…இப்படி ஆகிப்போச்சே…கப்சிப்ஆன கண்டக்டர்…

அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கதையினுடைய பிரதிபலிப்பாக இருப்பதோடு,  பல நேரங்களில் காட்சிகளினுடைய அழுத்தம் பாடல்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டு  வருகிறது.

வரிகளுக்கு ஏற்ப மெட்டு, மெட்டுக்கேற்ற வரிகள், அவற்றிற்கேற்ப பாடல் பாடும் விதம். இவையே பாடல்கள் மீதான ஈர்ப்புத்தன்மையையும், ரசிப்பு தன்மையும் உருவாக்கும்.

டூயட் பாடல்களோ, சோகப் பாடல்களோ, உற்சாக பாடல்களோ, பாடகர்கள் அதனை கையாளும் விதத்திலுமே வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுகிறது.

janaki
janaki

எஸ்.ஜானகி தமிழ் திரையுலகில் கையாளாத  உணர்ச்சிப்பூர்வமான பாடல்களே கிடையாது. ஏற்ற, இறக்கங்களை கொடுப்பதில் வல்லவர். அதிலும் இவர் மறைந்த எஸ்.பி.பியுடன் இணைந்து பாடிய பாடல்களில் அதிகமானவை  சொல்லும் படியான வெற்றிகளை  பெற்றிருந்தது.

அப்படிப்பட்ட எஸ்.ஜானகி ஒரு பாடலைப் பாடும் பொழுது, அந்தப் பாடலுடைய வரிகளாலும், அதன் இசையாலும் பாடலை முழுமையாக பாட முடியாமல் கண்ணீர் விட்ட படியே நின்றிருக்கிறார். இதனால் ஒலிப்பதிவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

கவிஞர் வாலியினுடைய வரிகளில், இளையராஜாவின் இசையில் ஜானகி மனம் உருகி பாடிய பாடல்  “அச்சாணி ” திரைப்படத்தில் வரும் ‘மாதா உன் கோவிலில்’. இந்த பாடலை முழுமையாக பாட முடியாமல் ஜானகி தவித்திருக்கிறார்.

இன்று கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் அந்த பாடல் பதிவு செய்யப்படும் பொழுது உணர்ச்சி மிகையால்   தடைகள் ஏற்பட்டிருக்கிறது. அதனை எல்லாம் தாண்டி தான் அந்த  பாடல் பதிவு நிறைவடைந்திருக்கிறது. பாடல் ஒலிப்பதிவின் போது கைகளை அசைத்தும். உன்னிப்பாக இசை ஓட்டத்தை கவனிப்பவர்கள்  கண்டக்டர்கள்.

இந்த பாடல் பதிவு நேரத்தில் மிக  உருக்கமாக இருந்ததால்,  அவர் கூட தனது கைகளை பிசைந்து கொண்டு அமைதி காத்து வந்திருக்கிறார்.