cinema news
காணாமல் போன யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டா ஐடி?…மங்காத்தா பணப்பெட்டி மாதிரி மாயமான மர்மம் என்ன!…
இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜா இசையால் திரைஉலகிற்கு தனது தனி பங்களிப்பை கொடுத்து வருகிறார். மேற்கத்திய இசையை அதிகமாக கையாளும் இவர், கிராமத்து நடையில் பொளந்து கட்டிய “பருத்திவீரன்” பம்பர் ஹிட் அடித்தது.
அஜீத் குமாரின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய பின்னணி இசை அஜீத்தின் நடைக்கும், கம்பீரத்திற்கும் ஏற்றது போல நூறு சதவீதம் பொருந்தியிருக்கும். இவரது சகோதரரான வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்திலும் இவரே இசையமைப்பாளராக பணியாற்றுவார்.
அஜித் குமார் நடித்த ஐம்பதாவது படமான “மங்காத்தா”வை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைத்திருப்பார். தற்பொழுது விஜய் நடித்து வரும் “கோட்” படத்தினுடைய இசையமைப்பாளரும் இவரே படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே தான்.
சித்திரை ஒன்றன்று “கோட்” படத்தினுடைய ‘ஃபர்ஸ்ட் சிங்கிள்’ வெளியிடப்பட்டது. விஜய்,பிரபுதேவா,பிரசாந்த் நடனமாடிய பாடல் வீடியோ வெளியானதில் இருந்து எதிர்மறை விமர்சனத்தையே அதிகமாக பெற்று தந்தது. “மங்காத்தா” ‘அம்பானி பரம்பரை’ பாட்டின் சாயலிலேயே எடுப்பது போல எடுத்து சொதப்பி விட்டார்கள் என ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜாவினுடைய இன்ஸ்டா ஐடி காணாமல் போனது. எவரேனும் ஹேக் செய்து விட்டார்களா? அல்லது “கோட்” பட பாடல் வீடியோவால் வந்த எதிர்மறை விமர்சனங்களால் இவரே அழித்து விட்டாரா? என்ற குழப்பமும் இருந்து வருகிறது. “மங்காத்தா” பட பணப்பெட்டி திடீரென மாயமாவது போல், இவரது ‘இன்ஸ்டாகிராம் ஐடி’யும் காணாமல் போனது என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாரா யுவன்?.