cinema news
தள்ளி போகுதாமே விடாமுயற்சி?…வேற வேலையே இல்லையா உங்களுக்கு?…திரும்பவும் ரிப்பீட்டா!…
வருகிற தீபாவளி பண்டிகைக்கு நான்கு படங்கள் மோத உள்ளது என சமீபத்தில் சொல்லப்பட்டது. அஜீத் நடிக்கும் “விடாமுயற்சி”, சூர்யாவின் “கங்குவா”, விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி, கவின் நடிக்கும் “கிஸ்”. இதோடு இப்போது மேலும் ஒரு படம் இணைய உள்ளதாம். “விடுதலை -2” படத்தை எப்படியாவது தீபாவளியன்று ரீலீஸ் செய்ய வேண்டும் என வேலைகள் நடக்கிறதாம்.
ஆக மொத்தம் நாலு படங்கள். கணக்கின் படி ஐந்து தானே வரும், ஏன் நான்கு என சொல்லியிருக்கின்றீர்கள் என கேட்கின்றீர்கள் தானே. “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன்.
“மங்காத்தா” படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் நடித்தார், அதன் பின்னர் விஜயுடன் நடித்திருந்தார், இப்போது “விடாமுயற்சி”யில் மீண்டும் அஜீத்துடன் அடுத்த கட்ட மோதலுக்கு தயாராகி வருகிறார்.
அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணதேதி நெருங்கி வருகிறது. “விடாமுயற்சி’ படத்தில் அர்ஜூன் நடிக்க வேண்டிய காட்சிகள் இன்னும் பாக்கி இருக்கிறதாம்.
அதில் நடிக்க அவரை அழைத்த போது அவர் திருமண வேலைகளை கவனிக்க வேண்டியதிருப்பதாக சொல்லி வருகிறாராம். படத்திற்கு அவர் கால்ஷீட் கொடுத்த தேதியெல்லாம் முடிவடைந்து தான் போயிருக்கும் படம் தொடர்ச்சியாக தாமதப்பட்டதால்.
அதனால் அர்ஜூனை படத்தை முடித்து விட்டு தான் சொந்த வேலைகளை பார்க்க வேண்டும் என சொல்லவும் முடியாது.அதோடு மட்டுமல்லாமல் இது திருமண நிகழ்வு என்பதால் அவரை நடிக்க வர்ச்சொல்லி வற்புறுத்தவும் முடியாது.
“குட் பேட் அக்லி” பட ஷூடிங்கிலும் அஜீத் வேகம் காட்டி வருகிறார்.அதோடு அடுத்தடுத்த படங்கள் குறித்த ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
அதனால் அர்ஜூனுக்காக காத்திருந்தால் அஜீத்தின் கால்ஷீட் பிரச்சனை அடுத்து வந்து விடக்கூடாது என யோசிக்க வைத்துள்ளதாம். அர்ஜூன் மெனக்கிட்டால் மட்டுமே படம் குறித்தது படி தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருப்பதாக பிரபல விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார். இப்போது சொல்லுங்கள் நமது கணக்கின் படி தீபாவளிக்கு வரவிருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனையாக இருக்கும்?.