cinema news
தலைவரு அலப்பற…களத்துல சூப்பர் ஸ்டாருதான்!…வசூல் வேட்டையில் இறங்கிய வேட்டையன்?…
“கூலி” படத்தின் வேலைகள் விரைவில் துவங்கயிருக்கும் நிலையில் ரஜினி தனது அடுத்தடுத்த ப்ராஜெக்டுகளை பற்றி தீவிரமாக சிந்தித்து வருகிறாராம். அநேகமாக “ஜெயிலர்-2″வாகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை விட விறுவிறுப்பு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில் இப்போதே நெல்சன் முனைப்பாக இருக்கிறார் போல.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க ரஜினி ரசிகர்களின் தீவிர எதிர்பார்ப்பு “வேட்டையன்” மீது இருந்து வருகிறது. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் தான் இருக்கிறது. விரைவில் ஆடியோ ரீலீஸ் இருக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சனும் படத்தில் இணைந்துள்ளார்.
இவர்கள் இருவரையும் திரையில் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை. இமயமலை சுற்றுப்பயணம், படப்பிடிப்பு என் இப்பவும் தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாரு தான் என அவரது ரசிகர்கள சொல்லும் படியாகத்தான் ரஜினி இருந்து வருகிறார் இந்த வயதிலும்.
“வேட்டையன்” படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல அமேசான் பிரைம் ஓ.டி.டி. உரிமையை 90கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை பற்றிய உறுதியான தகவல்கள் விரைவில் வெளிவந்து விடும்.
எது எப்படியோ படம் வெளிவரும் முன்னரே வசூல் வேட்டையில் இறங்கி விட்டார் “வேட்டையன்” என்று தான் சொல்ல முடியும் உறுதியான தகவல்கள் வந்த பிறகு.
சமீபத்தில் படம் ரிலீஸ் குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என படக்குழு சொல்லியிருந்த நிலையில் ஆயுத பூஜை பண்டிகைக்கு முன்னரே, அக்டோபர் மாதம் 10ம் தேதி ரீலிஸ் என தெரியப்படுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார் “வேட்டையன்” படத்தில்.