cinema news
புகை பிடிக்கும் ரசிகரை திருத்திய யுவன்
மே 31 அன்றுய் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது. இது உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில்
புகையிலைக்கு எதிரான ஒரு பதிவை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன் படி, “நீங்கள் புகை பிடிப்பதால் உங்களுடைய உடம்பிற்கு ஸ்லோ பாய்சனை ஏற்றிக் கொள்வதோடு மட்டுமின்றி உங்களை சூழ்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கும் இதன்மூலம் பாதிப்பு ஏற்படுகிறது” என்று அவர் கூறி இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலர் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். ஆனால் ஒருவர் மட்டும், “நீங்கள் எனக்கு ஹாய் என்று ஒரு பதில் அளித்தால் நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு உடனே யுவன் சங்கர் ராஜா ஹாய் என்று பதில் அளித்தார். இந்த பதிவு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Continue Reading