வைபவ் கலக்கும் சிக்ஸர் டீசர் வீடியோ

6 மணிக்கு மேல கண்ணு தெரியாது .. வைபவ் கலக்கும் சிக்ஸர் டீசர் வீடியோ

சரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் வைபவ். அதன்பின் கோவா, ஈசன், மங்காத்தா என பல படங்களில் நடித்தார். இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் அவர் நடித்துள்ள ஆர்.கே.நகர் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சிக்ஸர் என்கிற படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக லால்வாணி நடித்துள்ளார். மேலும், சதீஷ், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மாலைக்கண் நோயுள்ளவராக வைபவ் நடித்துள்ளார். எனவே, அவருக்கு 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதை வைத்து ஜாலியான படமாக சிக்சர் உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது.