பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். சேது, வரலாறு உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் வித்தியாசமான நடனங்களை அமைத்து புகழ்பெற்றவர். இவரது மனைவி, மூத்த மகன் இவர் என சேர்த்து மூன்று பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி மருத்துவசெலவுகள் பல லட்சம் வருவதாகவும் அதை சமாளிக்க வழியில்லை என இவரது மூன்றாவது மகன் அஜய் கிருஷ்ணா சமூக வலைதளங்களில் கேட்டிருந்தார்.
இதை கேள்விப்பட்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும், நடிகர் தனுசும் தலா 5 லட்சம் கொடுத்து உதவியுள்ளனர்.