செல்போனை தட்டி விட்டார் – மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்!

264
செல்போனை தட்டி விட்டார் - மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்!

நடிகர் சிவக்குமார் செல்போனை மீண்டும் தட்டி விட்ட விவகாரம் மீண்டும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான விவாதாமாக மாறியுள்ளது.

2018ம் ஆண்டு மதுரையில் வாலிபர் ஒருவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்ட விவகாரம் பெரும் சர்ச்சைய கிளப்பியது. ஈவு இரக்கமின்றி நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்தனர். இதையடுத்து, அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, அந்த வாலிபருக்கு புது செல்போனையும் சிவக்குமார் வாங்கி கொடுத்தார்.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான ராம்தாஸ் வீட்டின் திருமண விழாவில் கலந்து கொண்ட சிவக்குமார் அவருடன் செல்பி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டி விட்டார்.

இதையடுத்து சிவக்குமார் என்கிற ஷேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் டிவிட்டரில் பதிவுகள் போட தற்போது இந்திய அளவில் அந்த ஷேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

பாருங்க:  உறைய வைக்கும் திகில் காட்சிகளுடன் ‘லிசா’ - டிரெய்லர் வீடியோ