நயன்தாராவே வேண்டாம் – சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

271

இனிமேல் நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர வேண்டாம் என நடிகர் சிவகார்த்திக்கேயன் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய நடிகர்கள் அந்தஸ்த்தை அடைந்தவர் சிவகார்த்திகேயன். சிறியவர் முதல் பெரியவர் வரையில் அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகராக அவர் விளங்குகிறார்.

எல்லா நடிகர்களையும் போல நடிகை நயன்தாராவுடன் நடிக்க அவரும் ஆசைப்பட்டார். அதன் விளைவே ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நயனுடம் ஜோடி போட்டார். அந்த படம் வியாபார ரீதியாக வெற்றி அடையவில்லை. அதேபோல், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்திலும் நயனுடன் ஜோடி போட்டார். அந்த படமும் ஊத்திக் கொண்டது.

எனவே, இனிமேல் நயனுடன் ஜோடி சேர வேண்டாம் என செண்டிமெண்டாக சிவகார்த்திகேயன் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.

பாருங்க:  சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ - டிரெய்லர் வீடியோ