Latest News
சீமானை சந்தித்த சிவகார்த்திகேயன்!… தூது விட்ட கோட்?..
நடிகர், இயக்குனர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருப்பவர் சீமான். இப்படி இவரை சொல்வதை விட கட்சி தலைவர் என்று சொன்னால் தான் பெரும்பாலானவர்களுக்கு எளிதாக புரியும். இப்போது அது தான் இவரின் அடையாளம்.
சின்னத்திரையிலிருந்து சினிமாவிற்கு சென்றவர் சிவகார்த்திகேயன். தனது கடினமான உழைப்பால் குறுகிய நாட்களிலேயே புகழின் உச்சியை அடைந்தவர் இவர், இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் “அமரன்’ படத்தில் நடித்து வருகிறார்.படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் தான் இவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது.
சிவகார்த்திகேயன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வந்த போட்டோவை பற்றி தான் வைரல் டாக் இப்போது. அரசியல் ஆர்வம் வந்து விட்டதா?, கட்சியில் இணையப்போகின்றாரா? என்றெல்லாம் யூகங்கள் கிளம்பியுள்ளது.
இது குறித்து பதிலளித்த சிவகார்த்திகேயன் சீமான் அண்ணன் மீது தனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு. மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் இது என்றார்.
சிவகார்த்திகேயன் நடித்து வெளியான “மிஸ்டர் லோக்கல்”படத்தில் சிறைக்கு செல்லும் காட்சியில் இங்கே தான் சீமான் அண்ணன் மாதிரியான ஆளுங்க இருக்காங்க என டயலாக் கூட பேசியிருந்தார். விஜய் ஒரு பக்கம் மாநாடு நடத்த ப்ளான் பண்ண, சிவகார்த்திகேயன் ஒரு பக்கம் சீமானை சந்திக்க, என்ன வேணும்னாலும் நடக்கலாம் யாரு கண்டான்னு நெட்டிசன்கள் பேசத்துவங்கி விட்டனராம்.
இரண்டரை மணி நேரம் நீடித்ததாம் இந்த சந்திப்பு. வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் ஒரு பவர் ஃபுல்லான கேரக்டர் ஒன்று இருக்கிறதாம்.
இதில் சீமான் நடித்தால் நன்றாக இருக்கும் என கோட் பட இயக்குனருமான வெங்கட் பிரபு நினைக்கிறாராம். சீமானிடம் இது பற்றி பேசப்பட்டதாம். அவர் தொடர்ந்து மவுனம் காட்டியே வருகிறாரம். அதனால் சிவகார்த்திகேயனை வைத்து தூது விட்டிருக்கிறார் கோட் வெங்கட் பிரபு என பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’அந்தணன் சொல்லியிருக்கிறார்.