சிவகார்த்திகேயன் விஜயின் இடம் தமிழ் சினிமாவில் காலியானால் இவர் தான் அதனை நிரப்புவார் என பலராலும் சொல்லப்படுகிறது. விஜயுடன் “கோட்” படத்தில் இவர் நடித்துள்ளதாக செய்திகள் சொல்லியிருக்கிறது. தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இவர் தமிழ் சினிமாவில்.
வெள்ளித்திரைக்கும் வரும் முன்னரே சின்னத்திரையின் மூலம் தமிழக மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்ற ஒரு தனிச்சிறப்பும் இவருக்கு உண்டு, இவரைப்போலவே தான் ஸ்டார் படத்தில் நடித்த கவின் கூட சின்னத்திரையில் பிரபலமாக இருந்து. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்கத்துவங்கியவர்.

அடுத்தடுத்து திரும்பிப்பார்க்கும் விதமான நல்ல படங்களை கொடுத்தும் வருகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான டாடா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான “ஸ்டார்” படம் கவினுக்கு நல்லதொரு பெயரை பெற்று கொடுத்தோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் ஈட்டியது.
சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் பொன்ராம் இயக்கத்தில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க திட்டம் தீட்டப்படுகிறதாம். இதில் சிவகார்த்திகேயன் ஏற்று நடித்த போஸ் பாண்டி கேரக்டரில் நடிக்க கவினை அனுகியுள்ளார்களாம். இந்த தகவலை பிரபல திரைப்பட விமர் சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் தெரிவித்துள்ளார். சின்னத்திரையிலிருந்து வந்து பிரபலமானவர்கள் இருவரும்.
ஆகையால் படத்தின் இரண்டாம் பாகம் அந்தணன் சொல்லியது போல எடுக்கப்பட்டால் அதில் கேமியோ ரோலிலாவது சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தான் அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்புமாகக்கூட இருக்கும்.