Connect with us

இப்போ தான கல்யாணம் உறுதியாச்சு அதுக்குள்ள மிஸ்யூ வா?…சித்தார்த்துக்கு சப்போர்ட் செய்த சிவகார்த்திகேயன் மாதவன்?…

siddharth sivakarthikeyan madhavan

cinema news

இப்போ தான கல்யாணம் உறுதியாச்சு அதுக்குள்ள மிஸ்யூ வா?…சித்தார்த்துக்கு சப்போர்ட் செய்த சிவகார்த்திகேயன் மாதவன்?…

 

“ஆயுத எழுத்து” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் சித்தார்த். படத்தில் சூர்யாவுடன் இணைந்தே நடித்திருந்தாலும், மணிரத்னமே படத்தை இயக்கியிருந்தாலும் பலரின் கண்கள் இவரை “ஆயுத எழுத்து” படத்தில் கவனிக்கத்தவறியது என கூட சொல்லலாம். ஆனால் ஷங்கரின் “பாய்ஸ்” படத்தில் இவரே அதிக முக்கியத்துவம் பெற்றார்.

பரத், நகுல், ஜெனிலியா என இளைஞர் பட்டாளத்தை கையில் எடுத்து களம் இறங்கினார் ஷங்கர். தனது பாதையிலிருந்து விலகிவிட்டாரா? படத்தை இப்படி இயக்கியிருக்கிறாரே ஷங்கர் எனவெல்லாம் விமர்சனங்கள் சற்று எதிர்மறையாக வந்தாலும் இறுதியில் “பாய்ஸ்” வெற்றி பெற்றது.

அதன் பின்னரே கதாநாயகனாக நடிக்கத்துவங்கினார் சித்தார்த் தனி ஆளாக. சமீபத்தில் அதிதி ராவ் ஹைதிரியுடன் விரைவில் திருமணம் என அறிவித்தார் சித்தார்த்.

சில நாட்கள் தமிழ் திரையில் அதிகம் காணப்படாதவராக இருந்தார் இவர், “சித்தா” படத்தின் வெற்றிக்கு பிறகு ரெக்கையை விரித்து வெற்றி வானில் பறக்க துவங்கியுள்ளார் இவர்.

“இந்தியன் – 2” படத்தில் முக்கியமான வேடத்தில் இவர் நடித்திருகிறார். படமும் விரைவில் வெளியாக உள்ளது.

miss you

miss you

 

சித்தார்தின் அடுத்த படம் மிஸ்யூ வை 7 மைல்ஸ் பெர் செகண்டு புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. ராஜசேகரன் படத்தினை இயக்குகிறார். இந்த படத்தினுடைய ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகியுள்ளது. மாதவனும், சிவகார்த்திகேயனும் இந்த போஸ்டரை வெளியிடுவார்கள் என சொல்லப்பட்டது.

போஸ்டர் படத்தை வெளியிட்டு சித்தார்திற்கு வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் சிவகர்த்திகேயன். இதே போல் ரஜினியின் “கூலி” பட இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சித்தார்திற்கு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

பட ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கப்போகும் சித்தார்த் தனது வருங்கால மனைவியை பார்த்து மிஸ்யூ என அன்பாக சொல்லிவிட்டு தனது வேளையை பார்க்க சென்றுவிட்டார் இவர் என சொல்லிவருகிறார்கள் சித்தார்த்தின் ரசிகர்கள்.

More in cinema news

To Top