cinema news
எனக்கு பதிலா அவர் நடிக்கட்டும்!… எம்.ஜி.ஆருக்கு ரெக்கமண்ட் செய்த சிவாஜி கணேசன்…
“பராசக்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி ‘சக்சஸ்’ என்ற தனது முதல் வசனத்தை பேசியது எந்த நேரத்திலோ தெரியாது ஆனால் அதற்கு பிறகு அவர் தொட்டதெல்லாம்வெற்றியாக மாறியது.
“பராசக்தி” வெற்றியை தொடர்ந்து சிவாஜிக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் தான் ஒரு படத்தினுடைய கதையை அதன் இயக்குனர் சிவாஜியிடம் சொல்லியிருக்கிறார்.
அப்பொழுது சிவாஜியோ தான் கடும் பிஸியாக இருக்கின்ற காரணத்தால், இந்த கதையை வேண்டுமானால் எம்.ஜி.ஆர்.இடம் சொல்லி, அவரது விருப்பத்தை கேட்டுக்கொள்ளுங்கள் என எம்.ஜி.ஆரின் பெயரை பரிந்துரைத்துள்ளார் சிவாஜி.
காலில் ஏற்பட்ட சிறு சின்ன காயத்தினால் சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த எம்.ஜி.ஆரை பார்த்து இயக்குனர் கதையை சொல்ல, அவரும் ஓ.கே சொல்லி சம்மதித்து விட்டாராம். அப்படி உருவானது தான் “மலைக்கள்ளன்” திரைப்படம்.
படத்தை பற்றிய ஒரு ருசீகர தகவல் என்னவென்றால் தமிழ் சினிமாவில் முதன்முதலாக தேசிய விருது பெற்ற படமாக “மலைக்கள்ளன்” அமைந்தது. அதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய ஒரு வசூல் சாதனையை அந்த நாட்களிலேயே பெற்றுத்தந்தது.
அந்த காலத்திலேயே லட்சக்கணக்கிலான வசூலை பெற்றுதந்த படம் என பேசப்பட்டது. ஒரு ஆங்கில படத்தின் கதையை தழுவியே எடுக்கப்பட்டது “மலைக்கள்ளன்” என்ற பேச்சும் பரவலாக இருந்தது. படம் வெளி வந்த நேரத்தில் எது எப்படியோ “மலைக்கள்ளன்” சிகரம் தொட்டது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.
“மலைக்கள்ளன்” படத்திற்கு பிறகு உயரத்திற்கு சென்ற எம்.ஜி.ஆரின் மார்க்கெட் அதற்குப் பிறகு கீழே இறங்கவே இல்லையாம். அவர் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியாக மாறியது.