cinema news
மண்ணிப்பு கேட்ட சிவாஜி…குறையாக நினைத்த தாயரிப்பாளர்!…பொறுத்து கொண்ட பெருந்தன்மை…
சிவாஜி கணேசன் நடிப்பில் சக்கரவர்த்தியாக வாழ்ந்து காட்டியவர். இன்றைய தலைமுறை நடிகர்களுக்கெல்லாம் இவரது நடிப்பு முன்னுதாரனமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
காட்சிகள், வசனங்களுக்கேத்த உச்சரிப்பு, முக பாவனைகள், உடல் அசைவு இதை எல்லாம் எப்படி கொடுத்து காட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதையும் இவரிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.
இதே போல இவரிடமிருந்து படிக்க நல்ல பழக்கங்களில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது நேரம் தவறாமை. படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருபவர்களை ஒரு காலத்தில் சிவாஜி சார் மாதிரி சரியான நேரத்துக்கு வந்துட்டீங்களே என உதாரணமாக சொல்லுவார்களாம். அந்த அளவு குறித்த நேரத்திற்கு வந்தடைவதை கடைபிடித்தாராம் இவர்.
ஒரு முறை முக்தா சீனிவாசனின் தயாரித்த படத்தில் நடித்து வந்தாராம் சிவாஜி. அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வந்தாரம் முக்தா சீனிவாசன். அங்கிருந்த சிவாஜி தயாரிப்பளர் என்றால் எப்போ வேண்டுமானாலும் வரலாம் என கிண்டலாக சொன்னாராம்.
எல்லோர் முன்னிலையில் சிவாஜி இப்படி சொன்னது தயாரிப்பாளருக்கு கஷ்டமாக இருந்ததாம். ஆனாலும் அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லையாம். இதே போல இன்னொரு நாள் சிவாஜி கணேசன் சற்று தாமதமாக வந்தாராம்.
செட்டிற்குள்ளே வந்த உடனே அங்கிருந்தவர்கள் எல்லோரிடமும் தாமதமாக வந்ததற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டாராம்.
இதனை பார்த்த முக்தா சீனிவாசன் எத்தனை பெரிய உயரத்திலிருந்தாலும் சிவாஜியின் தன்னடக்கத்தை பார்த்து வியந்து போனாராம்.
அதிலிருந்து சிவாஜி கணேசன் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளும் போது குறித்த நேரத்திற்கு வந்து விடுவாராம் முக்தா சீனிவாசன். இந்த தகவலை முக்தா சீனிவாசனின் மகன் சுந்தர் சொல்லியிருந்தார்.