cinema news
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 93வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரக்கோட்டையில் பிறந்தார். நடிப்பு சக்கரவர்த்தியாக நடிகர் திலகமாக விளங்கிய சிவாஜிகணேசன் கடந்த 2001ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
தமிழ் சினிமாவில் இவரின் இடத்தை பிடிக்க இன்னொருவர் பிறந்து வருவது என்பது மிக கடினமான காரியம். இவரின் நடிப்பு சாதனையை முறியடிப்பது என்பது இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் எவராலும் இயலாது என்பதே உண்மையான விசயமாகும்.
படப்பிடிப்பு 6 மணிக்கு என்றால் காலை 5 மணிக்கே படப்பிடிப்பு தளத்தில் வந்து உட்கார்ந்திருப்பதுதான் சிவாஜியின் தொழில் பக்திக்கு உதாரணமாக எல்லோரும் சொல்வது
தெய்வமகன், புதிய பறவை, திருவருட்செல்வர், வீரபாண்டிய கட்டபொம்மன், திருவிளையாடல், முதல் மரியாதை, தேவர் மகன் என இவரின் நடிப்பு திறமைக்கு சான்றுகள் ஏராளம் உண்டு.
இப்படி ஒரு சினிமா மேதை வாழ்ந்த தமிழ்நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொருவரும் கண்டிப்பாக பெருமைப்படவேண்டும்.