ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் “குட்…பேட்.. அக்லி…படத்தினுடைய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்த சூட்டிங் பாட்டுக்கு அருகே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் “விஸ்வம்பரா” படத்தினுடைய படப்பிடிப்பும் நடந்து வருகிறது.
படப்பிடிப்பின் இடையே அஜித்குமார் யாரும் எதிர்பாராத விதமாக சிரஞ்சீவி பட சூட்டிங் நடக்கும் ஸ்பாட்டிற்கு சென்று இருக்கிறார் அங்கு சிரஞ்சீவியை சந்தித்து கைக்குலுக்கி பேசியும் இருக்கிறார்.

தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நபர் வந்ததாகவும். அந்த முக்கியமான நபர் வேறு யாரும் அல்ல அஜீத் தான் என அஜீத்துடனான சந்திப்பு குறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சிரஞ்சீவி.
இதனைத் தொடர்ந்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். அதோடு அன்பான இதயம் கொண்ட அழகான ஆத்மா அஜித் என்றும் புகழ்ந்துள்ளார்.
அதோடு அஜீத் தமிழ் சினிமாவில் அடைந்துள்ள நட்சத்திர அந்தஸ்து தனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இருவரும் அரட்டை அடித்து பேசினோம் எனவும் தனது வலைதளத்தில் சொல்லியிருக்கிறார்.
சிரஞ்சீவி பகிர்ந்திருந்த அஜீத்துடனான இருவரின் புகைப்படம் தான் இப்பொழுது வைரலாகி வருகிறது. “விடாமுயற்சி” படம் போல இல்லமல் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடத்தப்பட்டு வருகிறது என்ற செய்தியே அஜீத் ரசிகர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியடையச்செய்திருந்தது.
இந்நிலையில் அஜீத் பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்காதா என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சிரஞ்சீவி கொடுத்துள்ள இந்த தகவல் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே “விடாமுயற்சி” படத்தினை தீபாவளியன்று வெளியிட வைக்க வேலைகள் விரைவு படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தியின் உண்மைத்தன்மையை பற்றி அஜீத்குமாரின் ரசிகர்கள் சிந்தித்தும் வருகிறனர்.