unnikrishnan
unnikrishnan

பேட்-டால சிக்ஸ் அடிக்க நெனைச்சேன்…இப்போ பாட்டால பவுண்டரி அடிக்கிறேன்…உன்னி கிருஷ்ணன் சொன்ன உண்மை!…

 

பாடகர் உன்னி கிருஷ்ணன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ராதா கிருஷ்ணன் – ஹரிணி  தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது அம்மா ஹரிணி மருத்துவர். கர்நாடக சங்கீதம் பாடுவதில் வல்லவரானவர் இவர். ஏ.ஆர்.ரகுமான் மூலம் தான் தமிழ் சினிமாவில் தனது என்ட்ரியை கொடுத்தார்.

ஷங்கர் இயக்கி பிரபுதேவா – நக்மா நடித்த “காதலன்” படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் வந்திருந்த பாடல்கள் எல்லாமே மெகா ஹிட்டானது. அதிலும் ‘என்னவளே அடி என்னவளே’ பாடல் காதலர்களை கவர்ந்திழுத்தது. இதில் உன்னிகிருஷ்ணன் பாடியிருந்த விதத்தால் பலரையும் கவர்ந்திழுத்திருந்தார்.

அதே போல அஜீத் நடித்த “பவித்ரா” படத்தில் வந்த ‘உயிரும் நீயே, உண்மையும் நீயே’ பாடலால் தன்னை திரும்பிப்பார்க்க வைத்தார். இசையில் எப்படி வல்லவராக திகழ்ந்து வருகிறாரோ அதே போல தனது இளமை காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் சிறந்து விளங்கியிருக்கிறார்.

unni krishnan
unni krishnan

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், வெங்கட் ராகவன், சிவ ராமகிருஷ்ணன் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் இவருக்கு இருந்திருக்கிறதாம். இசையை விட கிரிக்கெட் மீது தனக்கு அதிக ஆர்வம் இருந்ததாம் இவருக்கு.

ஆனால் விதியின் வசத்தால் இவர் கிரிக்கெட் வீரராக முடியாமல் போனதாம். ஆனால் இசை மட்டுமே இவருக்கு கைகொடுத்துள்ளது.

தமிழ் சினிமாவில் 90களில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களில் பல இவர் பாடியதாகத்தான் இருக்கும். அஜீத், விஜய் வளர்ந்த வந்த நேரத்தில் உன்னி கிருஷ்ணனின் குரலில் நிறைய பாடல்கள் வெளிவந்தது. அவர்களது வளர்ச்சிக்கும் இவரது குரலும் ஒரு காரணாமாக கூட கருதலாம்.