thug life
thug life

தக்-லைஃப்ல தட்டி தூக்கப்போகும் சிம்பு?…வெளியான ஃபோட்டோ!…அழகு பையனா இருக்காரே…

ஒருவழியா பிரச்சனையெல்லாத்தையும் முடிச்சிட்டாரு போல சிம்பு. மணிரத்னம் படத்துல நடிக்கிறதுன்னா சும்மாவா?. எப்பேர்ப்பட்ட இயக்குனர் அவரு. தக்-லைஃப் மட்டும் தடுமாறாம வந்துச்சின்னா சிம்பு சினிமா கேரியருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான்.

“ஜெயம்”ரவி,துல்கர் சல்மான் இவங்கதான் நடிக்கிறதா இருந்துச்சு முதல்ல. ஆனா பாருங்க நடுவுல ஏதேதோ குழப்பங்கள். இவங்க ரெண்டு பேரும் படத்துல நடிக்கவில்லைன்னு பகீர் செய்தி திடீரென வந்து விழுந்துச்சு. எப்படிப்பட்ட வாய்ப்பு இவங்களுக்கு கிடைக்காம போச்சேன்னு வருத்தப்பட வெச்சுது இவங்களோட ரசிகர்களை.

ரொம்ப பில்டப் பண்ற மாதிரி யாரும் நினைக்க மாட்டாங்க, இவங்க மிஸ் பண்ணின வாய்ப்பை பற்றி சொன்னா. காரணம் இன்னொரு முக்கியமான புள்ளியும் படத்துல நடிக்கிறதனாலயும் கூட தான் இதெல்லாம் உண்மைதான்னு சொல்லவைக்கும் . கமல்ஹாசன் நடிப்பு ராட்சஷன் இவரு. மணிரத்னம் படங்களை இயக்குவதில் கரை கண்டவர். இந்த கூட்டணியோட ஜோடி போடுற அதிர்ஷ்டம் சிம்புவுக்கு தான் இருந்திருக்கு போல.

simbu
simbu

சமீபத்தய படங்கள்  சரியா போகாம இருந்த சிம்புவுக்கு ‘பூஸ்ட்-அப்’ கொடுக்கிற மாதிரி தான் வந்திருக்கு இந்த வாய்ப்பு. இவருக்கு இந்த படத்துல என்ன ரோல்ன்னு யோசிச்சிக்கிட்டு இருக்கிற நேரத்துல வந்து விழுந்தது பாருங்க ஒரு அப்டேட்.

சிம்பு கையில துப்பாக்கியோட ஜீப்ல உட்கார்ந்திருக்கிற போட்டோ ஒன்ன வெளியிட்டிருக்காங்க படக்குழு. சிம்புவோட இந்த போஸுதான்  இப்ப வைரலா பரவிக்கிட்டிருக்கு வலைதளத்துல. எப்படியும் நெட்டிசனகள்லாம் சீக்கிரம் இந்த ஃபோட்டோவை பார்த்து விடுவாங்க. அப்புறம் ஆரம்பமாகும் கச்சேரி. ஆனாலும் சிம்பு பார்க்க கொஞ்சம் ஸ்டைலாத்தான் இருக்காருன்னு முணுமுணுமக்க வைச்சிருக்குது இந்த அப்டேட்.