cinema news
சீண்டிப்பார்த்த யவன் ஷங்கர் ராஜா…பரவாயில்லை போங்கன்னு மண்ணிச்சுவிட்ட மன்மதன்!…
யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் மிகமிக முக்கியமானவர். இவரது பாடல்களை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. பாடல்களால் மட்டுமல்லாது, தனது பின்னனி இசையினால் ஈர்த்தவர் இவர் ரசிகர்களை. வெங்கட் பிரபு படம் என்றாலே இவர் தான் இசயமைப்பார் என அடித்து சொல்லிவிடலாம்.
தனது சகோதரரான பிரேம்ஜி அமரனுடன் நெருக்கம் கொண்டிருக்கும் இவர் கொஞ்சம் குறும்புக்காரர் தானாம். இருவரும் இணைந்து சிம்புவை ப்ராங்க் செய்துள்ளார்கள். சிம்புவின் “மன்மதன்” படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் ரீ-ரெக்கார்டிங்னகின் போது பிரேம்ஜியுடன் சேர்ந்து சிம்புவை இவர் ப்ராங்க் செய்திருந்தாராம்.
“மன்மதன்” படத்தில் திருப்புமுனை காட்சியான சிம்புவின் காதலி, தனது ஆண் நண்பருடன் ‘க்ரூப்-ஸ்டடி செய்யும் காட்சி. அதன் பிறகு தான் மதன், மன்மதனாக மாறுவார். அவ்வளவு சீரியஸான காட்சி அது. அந்த காட்சிக்கு யுவன் ரீ-ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் போது பிரேம்ஜியும் உடனிருந்தாராம். சீரியஸான அந்த காட்சிக்கு யுவன் சிரிப்பு வரவைக்கும் விதமான ஒரு மியூசிக்கை காட்சியோடு சேர்த்துவிட்டாராம்.
இதனைப்பார்த்த சிம்பு அதிர்ச்சியில் துள்ளி குதித்து யுவன், பிரேம்ஜியிடம் யோவ் என்னயா இது என கோவமாக கேட்டாராம். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த இருவரும் சிம்புவை கூல் செய்து சும்மா ப்ராங்க் செய்யவே இப்படி செய்தோம் என்று சொன்ன பிறகே ரொம்ப சீரியஸாக இருந்த சிம்பு நார்மல் ஆனாராம். யுவன் ஷங்கர் ராஜாவே ஒரு முறை இந்த சம்பவத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.