சிம்புவுடன் மீண்டும் இணையும் நடிகை ஹன்சிகா?

256
சிம்புவுடன் மீண்டும் இணையும் நடிகை ஹன்சிகா

நடிகை சிம்புவுடன் நடிகை ஹன்சிகா ஒரு புதிய படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார்.

நடிகர் சிம்பு தனது சொந்த வாழ்வில் முதலில் நயன்தாராவை காதலித்தார். ஆனால், அது கைக்கூட வில்லை. அதன்பின் ஹன்சிகாவை காதலித்தார். ஆனால், அந்த காதலும் சிம்புவுக்கு கைக்கூடவில்லை. அதன்பின் சிம்பு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இந்நிலையில், திடீரென ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிம்பு நடிக்க  இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. தற்போது அந்த தகவலை இப்படத்தின் இயக்குனர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 வருடங்களுகு முன்பு வாலு படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். தற்போது 4 வருடங்களுக்கு பிறகு சிம்புவும், ஹன்சிகாவும் மீண்டும் இணையவுள்ளனர் குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  தளபதி 64 அப்டேட் - அதிரடி காட்டும் தாதாவாக விஜய்