சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது “இந்தியன் – 2” வின் இசை வெளியீட்டு விழா. பிரபலங்கள் மேடையே அலங்கரிக்க ரசிகர் கூட்டம் அலைமோத கண்கவர் விழாவாக முடிவடைந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிம்பு எப்போதும் போல லேட்டாக தான் என்ட்ரி கொடுத்தார்.
தாமததிற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக மேடையில் “தக்-லஃப்” பட ஷூட்டிங்கில் பங்கேற்று விட்டு வந்ததால் தான் லேட் என சொன்னார். விழாவில் பங்கேற்பது குறித்து ஏற்கனவே முடிவு எடுத்திருந்திருப்பார் சிம்பு. “தக்-லைஃப்” இயக்குனர் மணிரத்னத்திடம் இதற்கு அனுமதி வாங்கிவிட்டு குறித்த நேரத்திற்கு வந்திருக்கலாம்.
ஆனால் அப்படியெல்லாம் அவர் செய்ய மாட்டார். லேட்டாக வந்தால் தான் கவனம் பெறலாம். அது தனக்கான பப்ளிசிட்டியாக இருக்கும் என்பதனாலே தான் தாமதமாக வந்திருப்பார்.
அதோடு சிம்பு நேர்மையாக இருந்து, உண்மையயை மட்டுமே பேசுவார் என் சொல்வதில் அர்த்தம் கிடையாது. அவர் உண்மையை பேசாதது தான் அவரது தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என சிம்புவை வார்த்தைகளால் விளாசித்தள்ளியிருக்கிறார் பிரபல திரை விமர்சகர் பிஸ்மி.

லஞ்சம், ஊழல் குறித்தெல்லாம் யோசிக்க நேரமில்லாமல் இருக்கும் 2கே கிட்ஸ்களுக்கு “இந்தியன்-2” படம் பிடிக்கும் என சொல்லிவிட முடியாது. அவர்களின் ரசனைக்கு இது செட் ஆகாது அதனால் படத்திற்கு சிக்கல் ஏற்படும் எனவும் பிஸ்மி சொல்லியிருக்கிறார்.
இந்தியன் -2ல் கமல் போட்ட மேக்-அப் கூட நெகட்டிவாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் படம் ஹிட்டாகுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என சொல்லிமுடித்திருக்கிறார் பிஸ்மி.