இந்தியன் 2 மேக்கப் டெஸ்ட் – அமெரிக்கா செல்லும் ஷங்கர்

310

இந்தியன் 2 படத்துக்கான மேக்கப்பிற்காக இயக்குனர் ஷங்கர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார்.

ஷங்கர் – கமல்ஹாசன் மீண்டும் இணையும் இந்தியன் 2 படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த பூஜையில் கமல்ஹாசன் இந்தியன் தாத்தா கெட்-அப்பில் இருந்தார். ஆனால், அது அவருக்கு சரியாக பொருந்தவில்லை என விமர்சனம் எழுந்தது. கமல்ஹாசன் மேக்கபில் ஷங்கருக்கும் திருப்தி ஏற்படாததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனவே, கமலும் தனது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்,.

இந்நிலையில், அடுத்த வாரம் சங்கர் அமெரிக்கா செல்கிறார். அங்குள்ள மேக்கப் கலைஞர்களோடு ஆலோசித்துவிட்டு, கமலுக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கவுள்ளாரம். அதன்பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  பூனைகளுக்கும் பரவியதா கொரோனா? அமெரிக்காவில் அடுத்த அதிர்ச்சி!