ajith shalini shamili
ajith shalini shamili

நான் அக்கா மாதிரியெல்லாம் கிடையாதுங்க!…இது தான் என் ரூட்டூ… அட ஷாலினி தங்கச்சியா? .

குழந்தை நட்சத்திரமாக களமிறங்கி தனது அருமையான நடிப்பால் வியக்க வைத்தவர் ஷாலினி. நாளடைவில் கதாநாயகியாகயாகவும் வலம் வந்திருந்தார். தனது காதலரும், தமிழ் திரை உலகின் ‘தல’யுமான அஜீத்தை திருமணம் செய்த பின்னர் வெள்ளித்திரையை விட்டே விலகி விட்டார். இவரது குடும்பம் கலைக்குடும்பம் என்று சொன்னால் அது ஏற்புடையது தான்.இவரது சகோதரர் ரிச்சர்டும்  “காதல் வைரஸ்” படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.

இவரது தங்கை ஷாமிலியும் திரை துறையில் பயணித்து வந்தவர் தான். குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகம் கிடைத்தவர். பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவரின் பெயரை இன்றும் நினைவில் வரவழைக்கும் படம் ‘அஞ்சலி’. படத்தில் பேசாமலேயே பிஞ்சு வயதிலேயே அப்படி ஒரு நடிப்பு. அது அள்ளிக்குவித்துக்கொடுத்தது விருதுகளை. தேசிய விருது, தமிழக அரசின் விருது என குழந்தை பருவத்திலேயே புகழை பெற்றவர்.

veera shivaji
veera shivaji

தனது அக்காவை போலே இவரும் கதாநாயாகியாக நடித்தார் ஆனால் அது அவரை கைதூக்கி விட தயாராக இல்லை. விக்ரம் பிரபுவின் “வீர சிவாஜி” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எதிர்பார்த்த முடிவினை அந்த படம் பெற்றுத்தரவில்லை  என்பதனை உணர்ந்து தன்னால் இங்கேயே சாதிக்க முடியும் என்பதோடு மட்டுமல்லாது தனக்கு நன்கு பரீட்சயமான ஓவிய கலையிலேயே தனது கவனத்தை காட்டி வருகிறாராம்.

ஓவியங்கள் வரைவதில் வல்லவரான இவரது பெயின்டிங்கள் துபாய் போன்ற நாடுகளில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. எப்படியாவது ஓவியக்கலையில் கற்று கைதேர்ந்தவராக திகழ வேண்டும் என்பதே இவரின் லட்சியமாம்.

அதனால் தான் அவர் நடிப்பின் மீது ஆர்வம் காட்டமலே இருந்தும் வந்திருகிறாராம். எது எப்படியோ கலை சார்ந்த ஏதாவது ஒரிடத்தில் தான் இருக்க வேண்டும் என தீர்க்கமான முடிவினை எடுத்து அதிலேயே தனது முழூஉழைப்பையும் கொடுத்து வந்தவராம் ஷாமிலி.