Entertainment
ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று படம் விரைவில்
கவுண்டமணியுடன் ஆரம்ப காலங்களில் நட்சத்திர நாயகன், ஜல்லிக்கட்டுக்காளை உட்பட பல படங்களில் காமெடி செய்தவர் ஷகிலா. ஒரு கட்டத்தில் மலையாளக்கரையோரம் கரை ஒதுங்கிய ஷகிலா டீன் ஏஜ் பையன்களை உசுப்பேற்றும் விதமான படங்களில் நடித்து பலரை கவர்ந்தார்.
சிறிய பட்ஜெட்டில் படுக்கையறை காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாக ஷகிலாவின் படங்கள் இருந்ததால் அடிக்கடி இவரது படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்தது.
இதனால் கேரளாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள் மலையாள சினிமா வசூல் பாதிக்கப்படுகிறது என ஷகிலாவின் படங்களை கடுமையாக எதிர்த்தனர். அதிகமான மலையாளப்படங்களில் நடித்து இளசுகளை கவர்ந்த ஷகிலா தற்போது அது போல அடல்ஸ் ஒன்லி படங்களில் நடிப்பதில்லை விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
தற்போது தமிழில் “ஷகிலா” என்ற பெயரில் பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த சம்பவத்தால் வாழ்க்கையை புரட்டிப் போட்ட வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூற இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார்.
