Entertainment
சீனு ராமசாமி ஜிவி பிரகாஷ் இணையும் படம்
தமிழ் சினிமாவில் கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குநரான சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே.
உதயநிதி ஸ்டாலின், தமன்னா இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தைத் அடுத்து, இயக்குநர் சீனு ராமசாமி நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷை நாயகனாக வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்தார்.
சீனு ராமசாமி கூறிய கதை ஜி.வி.பிரகாஷுக்கு பிடித்துப்போனதால் அவரும் உடனே சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்தன. தற்போது ஆரம்பக்கட்டப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகிவருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக காயத்ரி நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர், இப்படத்தில் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் செவிலியராக நடிக்கவுள்ளார். சீனு ராமசாமியின் எட்டாவது படமான இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேனியில் தொடங்கவுள்ளது.
