cinema news
சூப்பர் ஸ்டார் இல்லைங்க அவரு ஜேம்ஸ் பாண்டு…ஹின்ட் கொடுத்த இயக்குனர்…இசையாக்கிய தேவா?…
ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் எது அதிக முக்கிய இடம் பெறும் என்று சொன்னால் அதில் “அண்ணாமலை” நிச்சயமாக இருக்கும். பிரிக்கமுடியாத நண்பர்கள் இருவருக்கு இடையே நடக்கும் போட்டி தான் படம். வெகுளி நண்பனாக ரஜினி, தந்தை செய்த செயலால் நட்பை இழக்கும் சரத்பாபு.
ரஜினி ரசிகர்களைன் சீட் நுனியில் உட்காரவைத்து ஒவ்வொரு காட்சிகளுக்கும் கைத்தட்டல் சத்தத்தை உண்டாக்கி கொடுத்த படம் அது. படத்தில் பஞ்ச் டயலாக்குகள் தூள் பறந்தது.
ரஜினி படத்தினை பார்க்க வரும் ரசிகர் எதையெல்லாம் எதிர்பார்த்து வருவாரா அதையெல்லாம் பூர்த்தி செய்து இருந்தது “அண்ணாமலை”. என்பதில் யாரும் ரஜினியை விரும்பாதவர்கள் கூட மறுக்க மாட்டார்கள்.
ஆனால் படத்தில் எல்லோரும் ஏற்றுக்கொண்ட விஷயம் இசையும் தான். தேவா இசையமைத்த விதம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. பாடல்கள் எல்லாமே செம ஹிட் ஆனது.
அதிலும் ரஜினியின் டைட்டில் கார்டு வரும்போது தேவா கொடுத்த மெட்டு தான் இன்றும் அவரது படங்களில் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு டியூன்களை தேவா போட்டுக்கொடுத்தாராம். அதில் திருப்தி அதிகம் இல்லாத நிலையும் இருந்து வந்ததாம். படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தேவாவிற்கு ஐடியா கொடுத்தாராம்.
ஜேம்ஸ் பாண்டு படங்களில் வரும் பின்னனி போல இருந்தால் நன்றாக இருக்கும் என் சொன்னாராம்.உடனே அதனை மனதில் வைத்துக்கொண்டு தான் “அண்ணாமலை”படத்தின் இன்ட்ரோ மியூசிக்கின் மெட்டினை போட்டாராம். இதே கூட்டணி தான் ரஜினியின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் படமான “பாட்ஷா”வையும் கொடுத்திருந்தது.