நடிகர் என்பதையும் தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ்களில் அதிக ஆர்வம் கொண்டவர் அஜீத் குமார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ரவுண்டு அடிக்க கிளம்பி விடுவார். அவருடைய ரவுண்டு என்பது பல ஆயிரம் மைல்களை கடப்பது. சமீபத்தில் உலக டூர் கூட சென்று வந்துள்ளார். அது சம்பந்தப்பட்ட போட்டோக்கள் கூட வலைத்தளங்களில் வெளிவந்தது.
இப்படி தனது பைக்கிலேயே சுற்றி வந்து கொண்டிருக்கும் அஜீத்குமாரின் பயணம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன். அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை வெளியிட்டுள்ளார் அவரது வலைதள பக்கத்தில்.

அஜீத் செல்லும் பைக்கிற்கு பின்னால் எப்பொழுதுமே ஒரு ஜீப் சென்று கொண்டு இருக்குமாம். அஜீத்தின் நண்பர்கள் அந்த ஜீப்பிலே அவருக்கு பாதுகாப்பாக பின்னால் வருவார்களாம். ஜீப்பை பின் தொடர்ந்து எப்பொழுதுமே ஒரு கேராவேன் வந்து கொண்டிருக்குமாம். அந்த கேராவேனில் மருத்துவ முதலுதவி செய்யும் உபகரணங்கள், சமைத்து சாப்பிட தேவையான பொருட்களும் உள்ளே இருக்குமாம்.
இதென்ன பிரமாதம் இதைவிட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்குன்னு சொல்லி இருக்கிற அந்தணன். அந்த கேராவேனுக்கு பின்னால் ஒரு ஜீப் வருமாம். அந்த ஜீப்பில் எப்பொழுதுமே இரண்டு பைக்குகள் தயார் நிலையில் இருக்குமாம். அஜீத்குமார் ஓட்டிச்செல்லும் வாகனம் பழுதடைந்தால், அந்த வாகனத்தை மாற்றி விட்டு அதற்கு பதிலாக ஜீப்புக்குள் இருக்கிற பைக்கில் பயணிப்பாராம்.
அவரது பயணத்திற்கு எந்த விதமான தடைகள் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை முன்னேற்பாடுகளாம். இந்த ஆராய்ச்சிக்கு அஜீத்துடன் பயணித்த தனது நண்பர் ஒருவர் உதவியுள்ளார் என்பதையும் அந்தணன் சொல்லியிருக்கிறார்