Latest News
பிறந்த தினத்தில் அழ வைத்த விஜய்?…எதிர்பார்க்கவே இல்லையே இத!……
விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் காலையிலிருந்தே கலை கட்டிக்கொண்டிருகிறது. ரசிகர்கள் கட்சித்தலைவர் விஜயின் அன்புக்கு கட்டுப்பட்டாலும், நடிகர் விஜய் பிறந்த நாளை வேற லெவல்ல என்ஞ்ஜாய் பண்ணிக்கிட்டு தான் வர்றாங்க. இதுல சூடேத்துற விதமா வெங்கட் பிரபு, கமல்ஹாசன், சீமான்னு சொல்லி குவிந்த வாழ்த்துக்கள்.
இப்படி அண்ணாவோட பிறந்த நாளை அதகளப்படுத்திக்கிட்டு வர்றாங்க விஜய் ஃபேன்ஸ். இது ட்ரெண்ட் டீஸர்ன்னு தான் சொல்லனும். காலையில வெளிவந்த டீஸர விடாம திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க விஜய் ரசிகர்கள்.
சும்மாவா ரெண்டு விஜய்ல. அப்போ தியேட்டர்ல ஃபர்ஸ்ட் டே செலிப்ரேஸன் எந்த லெவல்ல இருக்கப்போகுதோ?.
காலையில டீஸர் சாயங்காலம் பாட்டு. ரிலீஸ் ஆகிடுச்சு சாங்க லிரிக்கல் வீடியோ. யுவன் ஷங்கர் ராஜா இசையில வெளியாகி இருக்குது. சும்மா சொல்ல கூடாது ‘சின்ன சின்ன கண்கள்’ பாட்டுல அப்படியே பழைய பவதாரணி வாய்ஸ கொண்டு வந்துட்டாரு.
இன்னொரு பக்கம் விஜயோட மென்மையான குரல் வேற. பாட்டு தாறுமாறா இருக்குறதா சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க பாடலை கேட்டவங்க.
படம் ஷூட்டிங் நடக்கும் போது ஹாஸ்ப்பிட்டல இருந்த பவதாரணிக்கிட்ட கண்டிப்பா திரும்ப வந்து நீங்க பாடுவீங்கன்னு சொல்லியிருக்கிறார் யுவன்.
பவதாரணி இப்போ உயிரோட இல்லேன்னானலும் ஏஐ டெக்னாலஜி மூலமா பவதாரணி வாய்ஸ திரும்பவும் கேட்க வச்சி தரமான சம்பவத்தை பண்ணிட்டாரு யுவன்.
பவதாரணி ரசிகர்கள் கூட இத எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. பாடலை கேட்டது தங்களை அறியாமலே கண்கள்ல இருந்து கண்ணீரை வரவழைச்சிட்டு இந்த ‘சின்ன சின்ன கண்கள்’ பாட்டு.