Latest News
செலிபிரேஷன் கிடையாது…ஆனா சாங் உண்டு…ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்த விஜய்!…
நடிகர் விஜயின் ஐம்பதாவது பிறந்த தினம் நாளை வருகிறது. இந்த பிறந்த தினம் அவரது ரசிகர்களால் ஸ்பெஷலாகவே பார்க்கப்படுகிறது.
இது வரை தங்களின் விருப்ப நடிகரின் பிறந்த தினமாக இருந்தது, இப்போது தங்களது தலைவரின் பிறந்த நாளாக மாறியிருப்பதால். சொன்னது போல தனது கட்சிப்பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கி விட்டார் விஜய்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு “தமிழக வெற்றிக் கழகம்” வேகாமாக செயல்படத்துவங்கும் என சொல்லியிருந்தார். அதன் படி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து, பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியருக்கு விரைவில் பாராட்டு விழா, கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டது என சுறுசுறுப்பு கூடி வருகிறது கடந்த சில நாட்களாக.
இந்தாண்டு தனது பிறந்த தினத்தை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். ரசிகர்கள் ஒரு புறம் இதை ஏற்றுக்கொண்டாலும் ஒரு நாள் மட்டும் தானே இந்த தினம் வருகிறது, அதை கொண்டாட வேண்டாம் என தங்களது அண்ணா சொல்லிவிட்டாரே என்ற வருத்தமும் இருக்கத்தான் செய்கிறதாம்.
கள்ளக்குறிச்சி சம்வத்திற்காகத்தான் இப்படி சொல்லியிருக்கிறார் விஜய். கட்சி தலைவர் கொண்டாட வேண்டாம் என சொல்லிய போதும், நடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுக்கப்போகிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் “கோட்” படத்தின் ஒரு பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.