தனுஷ் இயக்கி நடிக்கும் “ராயன்” படத்தினுடைய முதல் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் ‘அடங்காத அசுரன்’ பாடலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது படக்குழு. ஏ.ஆர்.ரகுமான், தனுஷ் இருவரின் குரலில் அந்த பாடல் வந்தது தனுஷ் ரசிகர்களை மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் படத்துடைய இரண்டாவது லிரிக்கல் வீடியோவை சில நிமிடங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளார் “ராயன்”. இவர்கள் இருவரின் கூட்டணி இதுவரை வெற்றிகளை மட்டுமே பார்த்துள்ளது.
இதனால் “ராயன்” படமும் நிச்சயமாக ஒரு ரவுண்டு வரும் நம்ப படுகிறது. இன்னிலையில் இரண்டாவது லிரிக்கல் ஆடியோ வெளியானது குஷிப்படுத்தியுள்ளது தனுஷ் ரசிகர்களை.

தர லோக்கல் பாடலாக மெட்டு போட்டு கொடுத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். தனுஷ், ரகுமான் கூட்டணியில் இதற்கு முன் வந்த படங்கள் ஆடியோ எல்லாம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆகி படத்துடைய வெற்றிக்கு உதவி இருந்தது. “ராயன்”னின் இரண்டாவது பாடல் ‘நீ இருக்கிறயே ஓலைக்கொட்டாயா’ என ஆரம்பிக்கிறது.
இதுவரை “ராயன்” படத்தில் வரக்கூடிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது பட குழுவால். ஆடிப்பாடி மகிழ்ந்து வருகின்ற வருகின்றனர் தனுசு ரசிகர்கள் இப்போது.
இவர்கள் இருவர் கூட்டணியின் முந்தைய சாதனை போலவே “ராயன்” பாடல்களும் அமையும் என்கின்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். அடுத்த மாதம் “ராயன்” வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது போலவே இரண்டாவது லிரிக்கல் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.