நடிகை ஆர்யாவும், சாயிஷாவும் செய்து கொள்வது காதல் திருமணம் அல்ல என சாயிஷாவின் தாய் கூறியுள்ளார்.
ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அவர்கள் இருவரும் கஜினிகாந்த் படத்தில் ஒன்றாக நடித்தனர். தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்திலும் இருவரும் நடிக்கின்றனர். எனவே, படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்பட்டது. மேலும், தனக்கும், சாயிஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் திருமனம் என ஆர்யாவே அறிவித்துவிட்டார். எனவே, இது முழுக்க முழுக்க காதல் திருமணம் எனவே கருதப்பட்டது.
ஆனால், இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரின் பெற்றோர்களும் பேசி முடிவெடுத்த திருமனம் என சாயிஷாவின் தாயார் பேட்டியளித்துள்ளார். ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை மிகவும் பிடித்துப் போக அவர்களே திருமணம் குறித்து எங்களிடம் பேசினர். சாயிஷாவுக்கு ஆர்யா போல் ஒரு மாப்பிள்ளை கிடைப்பது மகிழ்ச்சி என்பதால் நாங்களும் ஏற்றுக்கொண்டோம். தற்போது மகிழ்ச்சியுடன் திருமண வேலைகளை செய்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.