நடிகை சாயிஷா கர்ப்பமா - இன்ஸ்டாகிராம் பதிவால் அதிர்ச்சி

நடிகை சாயிஷா கர்ப்பமா? – இன்ஸ்டாகிராம் பதிவால் அதிர்ச்சி

நடிகை சாயிஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சாயிஷா கர்ப்பமா - இன்ஸ்டாகிராம் பதிவால் அதிர்ச்சி 01

கஜினிமுகம்மது படம் மூலம் இணைந்து நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே காதல் உருவாகியிருப்பதாக செய்தி கசிந்த நிலையில், திருமண செய்தியை அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஆர்யா.

அதன் பின் அவர் திரைப்பட வேலைகளில் இறங்கிவிட்டார். சமீபத்தில் கூட ஆர்யா நடிப்பில் உருவான மகாமுனி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரும், ஆர்யாவும் இணைந்து நிற்க நீ + நான் = எனப்பதிவிட்டு சில குறியீடுகளை இட்டுள்ளார்.

எனவே, அவர் கர்ப்பமாக இருப்பதையே மறைமுகமாக இப்படி குறிப்பிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.