“தம்பிக்கு எந்த ஊரு”, “நான் சிகப்பு மனிதன்”, மற்றும் ரஜினியின் 100வது படமான “ஸ்ரீராகவேந்திரா” படத்திகும் நடித்திருந்தார் சத்யராஜ். இவரகள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம் “மிஸ்டர் பாரத்”. தகப்பன், மகன் என்ற உறவு தான் படத்தில் இருவருக்குமிடையே.
தனது மகனுடன் தான் மோதுகின்றோம் என தெரியாமலேயே ரஜினியை கொலை செய்வது வரை போய்விடுவார் சத்யராஜ் வில்லனாக “மிஸ்டர் பாரத்” படத்தில். இருவரும் பாடி, ஆடிய ‘என்னம்மா கண்ணு செளக்கியமா’ பாடல் இன்று பார்த்தாலும் ரசிக்க வைக்கும்.

இருவரினுடைய கெமிஸ்ட்ரி அப்படி பொருந்தியிருந்தது படத்தில். “என்னம்மா கண்ணு” என்ற வார்த்தையையே பெயராக கொண்ட படத்தில் கதாநாயகனாக கூட நடித்துவிட்டார் சத்யராஜ்
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெளிவந்த “சிவாஜி” படத்தில் வில்லானாக நடிக்க சத்யராஜை அனுகியுள்ளார்கள். ஆனால் ஏதேதோ காரணங்களால் இருவரும் “சிவாஜி”யில் இணையாமலே போனது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் துவங்கப்பட உள்ள “கூலி” படத்தில் நடிக்க சத்யராஜ் சம்மதித்து விட்டதாக தகவல்கள் வந்தது.
ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் சத்யராஜ் எனசொல்லவும்பட்டது. ஆனால் இப்போது கசிந்துள்ள தகவல் என்னவென்றால் ரஜினிக்கு நண்பன் வேடத்தில் நடிக்க போகின்றாராம் சத்யராஜ்.
“என்னம்மா கண்ணு” என போட்டி போட்டு எதிரிகளாக பாடல் பாடிய இந்த இருவரும், வெளிவந்துள்ள தகவல் உண்மையானால் திரையில் ‘முஸ்தபா முஸ்தபா மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்’ என பாடுவார்களா? அல்லது “தளபதி” பட தேவா-சூர்யா போல நட்பு பேசுவார்களா? என்ற ரசிகர்களின் இப்போதைய கேள்விக்கு விடை படம் வெளிவந்தால் மட்டுமே கிடைக்கும்.