cinema news
இதை மட்டும் செய்யாம விட்டுட்டாரு!…ரகுவரன் செய்த தவறை சொல்லி வருத்தப்பட்ட சத்யராஜ்…
சத்யராஜ், ரகுவரன் இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள். சத்யராஜ் துவக்கத்தில் வில்லனாக நடித்து வந்தார். இவரது கொடூர வில்லத்தனத்திற்கு உதாரணமாக நிறைய படங்களை சொல்லலாம். இவரின் நடிப்பை மறைந்த கேப்டன் விஜயகாந்த் கூட பாராட்டியிருப்பார். “நூறாவது நாள்” படம் பற்றி பேசும் போது தான் விஜயகாந்த் பாராட்டி இருந்தார் சத்யராஜை.
ஆனால் ரகுவரின் கதையோ வேறு தனது முதல் படத்தில் கதாநாயகனாக தான் அறிமுகமானார். அது அவருக்கு பெரிதாக கை கொடுக்க வில்லை. பின்னர் வில்லனாக நடிக்க துவங்கினார்.
ரஜினிகாந்திற்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்தார். “அருணாச்சலம்”, “பாட்ஷா”, “ஊர்க்காவலன்” போன்ற படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார் ரகுவரன். இந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆனது.
சத்யராஜ், ரகுவரன் இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் தானாம். அப்போது அவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் நட்பு கிடையாதாம்.
ரகுவரனின் தந்தை அரிஸ்டோ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தாராம். அங்கு சாப்பிட சென்ற போது தான் இருவருக்கும் இடையே நட்பு பிறந்ததாம். இருவரும் “பூவிழி வாசலிலே”, “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு”, “மிஸ்டர் பாரத்” உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தனர்.
இருவரும் நாளடைவில் நெருங்கிய நண்பர்களாக மாறி விட்டனராம். பழகுவதற்கு நல்ல மனிதர் ரகுவரன் என சொல்லியிருந்த சத்யராஜ் தனது உடம்பை மட்டும் சரியாக கவணிக்காமல் இருந்து விட்டார் ரகுவரன். அதனால் தான் அவரை இழக்க வேண்டியது ஆகி விட்டது என தனது நண்பனை பற்றி சொல்லியிருந்தார் சத்யராஜ்.