cinema news
விஜயகாந்துக்கு விருது…மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சத்யராஜ்…பிரபு…
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது . அவரின் சார்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்திய குடியரசு தலைவரிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார். அவர் மறைந்து விட்ட பொழுதிலிம், அவருக்கு இந்தியாவின் உயரிய விருது கிடைத்திருப்பது அவரது ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.
தமிழ் திரை உலகமே விஜயகாந்திற்கு விருது கிடைத்தது குறித்து மகிழ்ந்து வருகிறது. அதே நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதால் அதை நினைத்து கலங்கியும், அவருக்கு அஞ்சலி செலுத்தியும் அவரது நினைவால் உருகியும் வருகின்றது.
தனது நண்பரான விஜயகாந்திற்கு கிடைக்கப்பட்டிருக்கும் விருதினை பற்றி உருக்கமாக பேசி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறர் சத்யராஜ். அவரது செய்தியில் எம்.ஜி.ஆரின் பாடலை குறிப்பிட்டு தனது அன்பினை வெளிப்படுத்தியுள்ளார். “இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடலின் வரிகளை சொல்லி தனது மகிழ்வினையும் தெரிவித்திருப்பார்.
இவரைப்போலவே பிரபுவும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நண்பரும், சகோதரருமான விஜயகாந்திற்கு விருது கிடைத்தது தன்னை மட்டுமல்லாது தனது குடும்பத்தாரையும் மகிழ்வைத்துள்ளதாகவும், தங்களது அன்னை இல்லம் சார்பாக விஜயகாந்தின் குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ பதிவு தற்போது வலைதளங்களில் வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதாபிமானியாகவே வாழ்ந்து மறைந்தவர் விஜயகாந்த். பிறரின் கஷ்டங்களை தனக்கு வந்தது போல நினைத்து தன்னால் இயன்ற உதவிகளை பலருக்கு செய்தவர் அவர்.